LEARN HYPNOTISM IN TAMIL (ONLINE COURSE)-WHATSAPP: IN CHIDAMBARAM
நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சம் பல்வேறு மர்மங்களை தனக்குள் அடக்கியிருக்கிறது. நம் கற்பணைக்கு எட்டாத பல விடயங்கள் நம்மை சுற்றி நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம் சற்று அகல கண் திறந்தால் அனைத்து மர்மங்களும் நமக்குள் ஒளிந்திருந்ததை உணர்வோம். என் சிறு வயதில் இருந்து பலவிதமான கேள்விகள் என் மனதை துளைத்துக் கொண்டே இருந்தது. அன்றில் இருந்து என் பல இரவுகள் விழிப்பிலேயே கழிந்தன. ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எங்கு? என்ன? போன்ற பல கேள்விகள் இந்த வாழ்கையை பற்றியதாகவே இருந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தெருவோரம் கிடந்த ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது. அந்த புத்தகத்தின் பெயர் தியானம். இதை படித்தபோது எனக்குள் ஏற்பட்டது பலவிதமான ஆச்சர்யங்களும் சந்தேகங்களும்தான். அந்த கனம் என் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும் வேதனையும் கலந்திருந்ததை உணர முடிந்தது. அன்றிலிருந்து பல நூல்களை படித்தேன். பல மதம் சார்ந்த கோயில்களுக்கு சென்றேன். காடு மலைகளெல்லாம் சுற்றினேன். சிங்கப்பூரில் பணியாற்றிபோது பல மதத்தினரின் தொடர்பை பெற்று அவர்களிடம் பல இரகசியங்களை கேட்டறிந்தேன். எல்லா மதமும் மனித இனத்திற்கு ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது என்பது மட்டும் அப்போது எனக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை. பிறகு பல நாட்கள் யோசித்து நானே களத்தில் குதிப்பது என தீர்மானித்தேன். அன்று முதல் நள்ளிரவில் தியானம் செய்ய ஆரம்பித்தேன். இவ்வளவு நாட்கள் படித்த நூல்கள் புரிய வைக்காததை அலைந்து திரிந்தபோது கிடைக்காததை தியானம் எனக்கு கற்றுக் கொடுத்தது. அதை எந்த ஒளிவு மறைவும் இன்றி சித்தர்களின் ஆசியோடும் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானிகளின் ஆசிர்வாதத்தோடும் இங்கே சமர்பிக்கிறேன். Whatsapp: 9361540263
4.00/5
1 reviews




Price:
₹ 0,00
₹ 0,00
Contact
CONTACT